டெல்லியிலும் ஹரியானாவிலும் லேசான நிலநடுக்கம்
இந்தியாவில் டெல்லியிலும், ஹரியானாவிலும் இரவு
9.20 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் அங்கு மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி
உள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. டெல்லியின்
அதிக மக்கள் வசிக்கும் முக்கிய பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்
அடைந்துள்ளனர். அதேபோல் ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் நிலநடுக்கம் பதிவானது.
அங்கும் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக எவ்வளவு சேதம் ஏற்பட்டது, என்ன பாதிப்பு ஏற்பட்டது விவரங்கள் வெளியாகவில்லை
இந்த நிலநடுக்கம் காரணமாக எவ்வளவு சேதம் ஏற்பட்டது, என்ன பாதிப்பு ஏற்பட்டது விவரங்கள் வெளியாகவில்லை
கருத்துகள் இல்லை