தீபிகா படுகோனேவுக்கு இணையாக நடனமாடிய சாயிஷா
பிரபல
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு இணையாக தமிழ் நடிகை சாயிஷா நடனமாடி வீடியோ ஒன்றை
வெளியிட்டிருக்கிறார்.
ஊரடங்கு
நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான
வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த
வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில்
தற்போது தீபிகா படுகோனே நடித்த பாஜிராவ் மஸ்தானி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு
பாடலுக்கு அவர் நடனம் ஆடிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த நடன வீடியோ வீட்டிலேயே
படமாக்கப்பட்டதாக சாயிஷா குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு
நிமிட வீடியோ ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபிகா
படுகோனேவின் மிக அருமையான டான்ஸ் மூவ்மெண்ட்டுக்களை அப்படியே இந்த நடனத்தில் பதிவு
செய்துள்ள சாயிஷாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கருத்துகள் இல்லை