ஓய்வுபெறுகிறார் இசையமைப்பாளர் கீரவாணி
30 வருடங்களுக்கும்
மேலாக சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்
வருகிறார் கீரவாணி
. இதுவரை 200க்கும்
மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் ஃபேவரைட் இசையமைப்பாளரான
இவர், அவரது உறவினரும் தற்போது எஸ் எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர்
படத்திற்கு இசையமைத்து வருகிறார் எம்எம் கீரவாணி. தெலுங்கு சினிமாவின் இசையுலகில் உச்சம்
தொட்ட இசையமைப்பாளர் கீரவாணி, இசைத்துறையில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
அண்மையில்
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த எம்எம் கீரவாணி, விரைவில் இசைத்துறையில் இருந்து ஓய்வு
பெற போவதாக தெரிவித்தார். அவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை