• Breaking News

    மன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்


    ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளார்

    ஜோதிகா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள். ப்ரெட்ரிக் என்பவர் இயக்கிய இப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் " இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு  அந்த இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம்.

    இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்" என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad