• Breaking News

    தாஜ்மஹால் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்


    தாஜ்மஹால் – பொதுவாக எல்லோரும் அறிந்த ஒரு பெயர். முகலாய சாம்ராஜ்யத்தின் மிக முக்கியமான கட்டிடக்கலை அற்புதங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படும் தாஜ்மஹால் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ளது.

    முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மூன்றாவது மனைவி மும்தாஜின் நினைவாக முழுவதும் வெள்ளைப் பளிங்கால் கட்டிய நினைவு மாளிகைதான் தாஜ்மஹால். தாஜ்மஹால் என்றால் அரபு மொழியில் "அரண்மனைகளின் கிரீடம்". முகலாயப் பேரரசின் விரிவாக்கத்தைக் காண்பிப்பது போல, இது இஸ்லாமிய, பாரசீக, ஒட்டோமான், துருக்கிய மற்றும் இந்திய கட்டடக்கலை பாணிகளை ஒருங்கிணைக்கிறது. தாஜ்மஹால் பற்றி சுவாரஸ்யமான சில உண்மைகள் கீழே உள்ளன.


    •   தாஜ்மஹால் கட்டப்பட்டது 1632-1653 காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் ஷாஜகான் கிட்டத்தட்ட 32 மில்லியன் இந்திய ரூபாய்களை இதனைக் கட்டுவதற்காக செலவிட்டார். தற்போது பணத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இன்று இதன் பெறுமதி பல பில்லியன் டொலர்கள்.
    •   தாஜ்மஹாலை அலங்கரிக்க சுமார் 28 வகையான விலைமதிப்பற்ற கற்கள் பயன்படுத்தப்பட்டன, அவை திபெத், சீனா, இலங்கை மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலிருந்து பெறப்பட்டன.
    •   தாஜ்மஹால் கட்டுமானத்துக்காக இந்தியா மற்றும் ஆசியா முழுவதிலும் இருந்து பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல 1,000 க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
    •   முன்னதாக, தாஜ்மஹால் புர்ஹான்பூரில்(Burhanpur ) (மத்தியப் பிரதேசம்) கட்டப்படவிருந்தது, அங்குதான் பிரசவத்தின்போது மும்தாஸ் இறந்தார். ஆனால் புர்ஹான்பூருக்கு போதுமான வெள்ளை பளிங்குகளை கொண்டுசெல்வதில் சிக்கல்கள் இருந்தன. எனவே ஆக்ராவில் தாஜ்மஹால் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. இது இப்போது ஆக்ராவில் பிரபலமான உள்நாட்டு சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது.


    •   தாஜ்மஹாலில் மும்தாஜின் கல்லறை மட்டுமல்ல, ஷாஜகானின் மற்ற மனைவிகள் மற்றும் பிடித்த ஊழியர்களின் கல்லறைகளும் உள்ளன. ஆனால் அவை தாஜ்மஹாலிக்கு வெளியே ஆனால் அதே வளாகத்தில் உள்ளன.
    •   ஒளி மற்றும் நேரத்தின் அளவைப் பொறுத்து தாஜ்மஹாலின் நிறம் மாறிக்கொண்டிருக்கும். தாஜ் காலையில் இளஞ்சிவப்பு நிறமாகவும், மாலையில் பால் வெள்ளை நிறமாகவும், நிலவொளியில் பொன்னிறமாகவும் தோன்றும். நீங்கள் எப்போதாவது தாஜ்மஹாலைப் பார்வையிட்டிருந்தால் இதை கவனித்திருப்பீர்கள். இல்லையென்றால் அடுத்த முறை நீங்கள் செல்லும்போது கவனிக்கவும்.
    •   தாஜ்மஹால் கட்டி முடிக்க 16 ஆண்டுகள் ஆனது (1632-1653). அதன்பிறகும் சிறிய சுத்திகரிப்புகள் தொடர்ந்ததால் வேலை முழுமையாக முடிக்கப்படவில்லை.


    •   இந்த அன்பின் சின்னத்தை உருவாக்கும் பாரிய திட்டத்தில் பங்களிக்க 20,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
    •   பேரரசர் ஷாஜகான் ஆற்றின் மறுகரையில் கறுப்பு பளிங்கில் மற்றொரு தாஜ்மஹால் கட்ட எண்ணினார். ஆனால் அவரது மகன்களுடனான போரினால் இந்த திட்டத்தை செயற்படுத்தமுடியவில்லை.
    •   கட்டுமாணப்பணி முடிந்ததும், தாஜ்மஹாலைப்போன்று இன்னொன்றை கட்டுவதை தடுப்பதற்காக, கல்லறையில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களதும் கைகளை வெட்டும்படி பேரரசர் உத்தரவிட்டதாக ஒரு வதந்தி உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad