• Breaking News

    உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பரவியது கொரோனா


    உலகையே தன் கோரப்பிடிக்குள் வித்திருக்கும் கொரோனா பத்து இலட்சம் ரொஹிங்யா அகதிகள் தங்கியுள்ள முகாமில் பரவியுள்ளதால் பங்களாதேஷ் அதிர்ச்சியடைந்துள்ளது.இதன் காரணமாக ஒரு முகாம் பகுதியின் 5 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட குடியுருப்பு பகுதி முழுமையாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஹேக்ஸ் பசார் என்ற பகுதியில் அமைந்துள்ள ரோஹிங்யா அகதிகள் முகாமில் இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் ஆயிரத்து 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

    மியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களின் சில குழுக்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தினர்.. இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மியான்மர் இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.

    மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியது முதல் உயிருக்கு அஞ்சி சுமார் 10  இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான  பங்களாதேஷில்  அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்

    இவர்கள் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகவும் மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த அப்பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad