கொரோனாவிலிருந்து விடுபட்ட கம்போடியா
கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட உலக நாடுகள் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கம்போடியாவில் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக தடுக்கப்பட்டதால் அந்நாட்டு மக்கள் அதன் பிடியில் இருந்து தப்பி உள்ளனர்.
கம்போடியாவில்
இது வரை 122 பேர் அதனால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 120 பேர் பல கட்டங்களாக நோயிலிருந்து
குணமடைந்தனர். அதில் 36 வயது பெண் ஒருவர் மட்டும் சிகிச்சையில் இருந்து வந்தார். தற்போது
அவரும் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது அந்நாட்டில் யாரும் கொரோனா சிகிச்சையில்
இல்லை.
கடந்த
ஏப். 12 முதல் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என கம்போடியாவின் சுகாதார அமைச்சகம்
தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விழிப்புடனும் இருக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும்
அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை கம்போடியாவில் யாரும் கொரோனாவுக்கு பலியாகவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை