• Breaking News

    சிரியாவில் பரவுகிறது கொரோனா


    சிரியாவில் முதல் முறையாக அதிகபட்சமாக 11 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய  கொரோனா வைரஸ் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கடந்த 5 மாதங்களாக தொடரும் கொரோனா   தொற்றால் அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசிய நாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனஇந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம் நடைபெறும் சிரியாவிலும்  கொரோனா தொற்று பரவல் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து  சுகாரத்துறை அமைச்சரகம் கூறும்போது, “சிரியாவில் இன்று   அதிகபட்சமாக 11 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுஎன்றார்.

    சிரியாவில் போர் சூழல் நிலவுவதால், கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்தே அங்கு கொரோனா தொடர்பான பரிசோதனைகள் குறைந்த எண்ணிக்கையில்தான் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது பரிசோதனைகள் கூடுதல் எண்ணிக்கையில் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சிரியாவில் ஜனாதிபதி  ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad