• Breaking News

    சச்சினை அவுட்டாக்க விரும்பாத பாகிஸ்தான் வீரர்


    இந்திய அணியின் தலைசிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கரை  ஆட்டமிழக்கச் செய்ய தான் விரும்புவதில்லை என பாகிஸ்தானின்  முன்னாள் தலைவரான ரஷீட் லத்தீப் கூறியுள்ளார். கிறிக்கெற்ரில் சச்சினை ஆட்டமிழக்கச்செய்வதும் ஒரு சாதனைதான்  ஆனால், கிறிக்கெற்றின் பரச்ம எதிரிகளாகக் கணிக்கப்படும் பாகிஸ்தான் வீரர் ஒருவர்  அவரை ஆட்டமிழக்கச்செய்யாது விளையாட்டை ரசிப்பேன் எனச் சொல்லியது விளையாட்டின் மகத்துவத்தை உயர்த்தியுள்ளது.
     இது பற்ரி ரஷீட் லத்தீப் மேலும் கூறிகையில்,
    “நான் விக்கெற் கீப்பராகப் பணியாற்றியகாலத்தில் ஏராளமான வீரர்கள் விளையாடினர்கள். ஆனால், சச்சின் டெண்டுல்கர் விளையாடும்போது அவரை ஆட்டமிழக்கச்செய்ய வேண்டும் என மனம் விரும்பியதில்லை. நான் கீப்பிங் செய்யும்போது அவரது ஆட்டத்தை ரசிப்பேன். டெண்டுல்கரின் பழக்க வழக்கம் வித்தியாசமானது. ஸ்டம்புக்குப் பின்னால் நின்று ஏதாவது கூறினால் பதிலளிக்க மாட்டார். மெல்லிதாக புன்னகைப்பார். பிரையன் லாரா, ரிகி பொண்டிங்,கலீஸ் ஆகியொர் விளையாடும்போது அவர்களை ஆட்டமிழக்கச்செய்ய வேண்டும் என நினைப்பேன்.
     . 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad