ஃபீஃபாவின் கூட்டம் ஒத்திவைப்பு
உலகக்கிண்ண
உதைபந்தாட்ட மகளிர் போட்டியை 2023 ஆம் ஆண்டு நடத்தும் நாட்டைத் தெரிவு செய்வதற்கான
கூட்டத்தை கொரோனா காரணமாக செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
ஃபீஃபா அறிவித்துள்ளது.. ஜூன் 25 ஆம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்
செப்ரெம்பர் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திராலியாவும்
நியூஸிலாந்தும் கூட்டாக உலகக்கிண்ண உதைபந்தாட்ட மகளிர் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
பிறேஸில்,கொலம்பியா,ஜப்பான் ஆகியனவும் தமது நாட்டில் போட்டியை நடத்த விருப்பம்
தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை