ஊரடங்கினால் இலங்கையில் வனவிலங்கு விலங்கு வேட்டை அதிகரிப்பு
இலங்கையில் ஊரடங்கு
நடைமுறைப்படுத்தப்பட்டதுக்குப் பிறகு,
வனவிலங்குகளை வேட்டையாடுதல்
அதிகரித்துள்ளது.
மார்ச் மாதம் முதல் மே 1 மாதம் வரையில் தினமும் 600 காட்டு பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாடப்பட்டிருப்பதாக இலங்கை
சுற்றுச் சூழலியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் தேசியப் பூங்காவில் பார்வையாளர்கள் வருகை நின்றுள்ளது. இதனால் வேட்டையாளார்கள் எவ்விதத் தடங்கலுமின்றி காட்டு உயிரனங்களை வேட்டியாடி வருவதாக சுற்றுச் சூழலியாளர்கள் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து இலங்கை சூழலியாளர் நயனகா ரன்வெல்லா ”தினமும் 50 முதல் 100 வேட்டைக்காரர்கள் தேசிய பூங்காவுக்குள் வருகின்றனர். கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகள் தினமும் வேட்டையாடப்படுகின்றன. மான்கள், முள்ளம் பன்றிகள் அதிகளவில் வேட்டையாடப்பட்டுள்ளன ” என்று தெரிவித்தார்.
இலங்கை காட்டுயிர் துறை செய்தித் தொடர்பாளர் ஹாசினி சரச்சந்திரா ”ஊரடங்குக்கு முன்னால் தினமும் 300 முதல் 400 வாகனங்கள் தேசியப் பூங்காவுக்குள் வரும். மக்கள் நடமாட்டமும் கண்காணிப்பும் தொடர்ந்து இருந்ததால் வேட்டையாடுபவர்கள் தேசியப் பூங்காவுக்குள் வர தயங்கினர். ஆனால், தற்போது மக்கள் வருகை நின்றுள்ளதால் வேட்டையாடுபவர்கள் பயமின்றி பூங்காவுக்குள் நுழைந்து வேட்டையாடுகின்றனர்” என்று கூறினார்.
இலங்கையில் ஏப்ரல் 1 முதல் மே 1 வரையில் காட்டு விலங்குகளை வேட்டையாடியதன் காரணமாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முந்தைய மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் ஆகும்.
கருத்துகள் இல்லை