படுக்கைக்கு அழைக்கும் அந்த வார்த்தை பிக்பாஸ் நடிகை
நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதற்கு, அந்த வார்த்தையைதான்
குறியீடாகப் பயன்படுத்துவார்கள் என்று பிரபல நடிகை பகீர் தகவல் தெரிவித்துள்ளார் தமிழில், யுனிவர்சிட்டி, எ பிலிம் பை அரவிந்த் படங்களில்
நடித்தவர் ஹிந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா. ஹிந்தியில் காமசூத்ரா 3டி படத்தில் நடித்து
பரபரப்பை கிளப்பிய இவர், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும்
பங்கேற்றிருந்த அவர், 27 நாட்கள் கழித்து அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ்
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நன்கு அறியப்பட்ட இவர், இப்போது பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைப்பதை பற்றிய கேள்விக்கு அது உண்மைதான் என்று
கூறியுள்ளார். ஏற்கனவே பல நடிகைகள் இதுபற்றி கூறியுள்ள நிலையில்,
இப்போது இவரும் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில்,
நான் பாலிவுட்டுக்கு வந்த புதிதில் எனது போட்டோக்களுடன் வாய்ப்புக்காக அலைவேன். அப்போது
அதைப் பார்ப்பவர்கள், ஓகே. நள்ளிரவு டின்னரில் சந்திப்போமா? என்று கேட்பார்கள். என்ன
அர்த்தம்? எனக்குப் புரியாது. நள்ளிரவில் என்ன டின்னர் என்று கேட்டுவிட்டு, எப்போது
டின்னருக்கு வரவேண்டும் என்று கேட்டால், அவர்கள், இரவு 11 அல்லது 12 மணிக்கு வரச்சொல்லுவார்கள்.
அந்த நேரத்தில் வரமுடியாது என்று கூறிவிட்டு செல்லமாட்டேன். அவர்கள் அப்படி கேட்பதற்கு
என்ன அர்த்தம் என்று புரியாமல் நீண்ட நாட்கள் இருந்தேன். இதற்கான
அர்த்தத்தைப் புரிந்துகொள்ள சில காலம் ஆனது
எனக்கு. நான்கைந்து முறை இப்படி என் புகைப்படங்களுடன்
வாய்ப்புக்காக அலைந்தபோதுதான், எல்லோருமே அந்த வார்த்தையை கேட்டதால், யோசித்து புரிந்துகொண்டேன்,
டின்னர் என்பதற்கு 'காம்ப்ரமைஸ்' என்ற அர்த்தம் என்று. அதாவது, 'என்னுடன் வா' என்பதுதான்
அதன் பொருள் என்று. பிறகு எனக்கு 'டின்னர்' வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
அதன்பிறகு சினிமா துறையை சேர்ந்த ஒருவர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியபோது, 'டயட்டில்
இருக்கிறேன். டின்னர் சாப்பிடமாட்டேன். பிரேக்பாஸ்ட் அல்லது மதிய உணவுக்கு அழையுங்கள்,
வருகிறேன்' என்று சொல்வேன். அதற்குப் பிறகு என் பக்கம் திரும்ப மாட்டார்கள்' என்று
தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை