கொரோனாவில் இருந்து பாதுகாக்க புது ஹெல்மெட்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றினால் கொரோனாவில் இருந்து விடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க புதுவித ஹெல்மெட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டில் வெளிக்காற்றை சுத்தப்படுத்தி
உள்ளே அனுப்பவும், சுவாசிக்கும் காற்றை வெளியேற்றவும்
சிறிய மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நமது கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளை நாமே தொடமுடியாத வகையில் இந்த ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. . கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த ஹெல்மெட் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை