• Breaking News

    சமூக வலைதளத்தில் இருந்து விலகிய மாஸ்டர் பட நடிகை


    பிரபல தொகுப்பாளினியான ரம்யா,மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஆடை  கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். தற்போது விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா  தற்போது திடீரென அதிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: "சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளப்போகிறேன். எல்லாம் நன்மைக்கே. இந்த லாக்டவுனின் கடைசி வாரத்தை மெதுவாக கழிக்க விரும்புகிறேன். கவலைப்பட வேண்டாம்  நான் முற்றிலும் நலமுடன் இருக்கிறேன். ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad