• Breaking News

    வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பற்றிய விநோத வதந்திகள்


    சந்தேகத்திற்கு இடமின்றி, உலகின் மிக ரகசிய நாடுகளில் வட கொரியாவும் ஒன்றாகும். இது பற்றி எங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. தற்போதைய தலைவர் கிம் ஜாங்-உன் (Kim Jong-Un) 2013 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார்.


    கிம்மின் குடும்பம் பல தலைமுறைகளாக வடகொரியாவை சர்வாதிகாரமாக ஆண்டு வருகிறது. இப்பொதும் கிம்மின் தாத்தா கால வினோதமான விதிகள் பல நடைமுரையில் உள்ளன. உதாரணமாக, செய்தித்தாள்களை மடிப்பதற்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

    கிம் ஜாங்-உன் பற்றிய சில வதந்திகளின் பட்டியல் இங்கே.

    1. கிம் ஹேர்கட்



    2014 இல், வட கொரிய ஆண்கள் அனைவரும் கிம்மைப் போன்று தலைமுடியை வெட்டிக்கொள்ள வேண்டும் என்று ரேடியோ ஃப்ரீ ஆசியாவால் (Radio Free Asia) தெரிவிக்கப்பட்டது. அதொன்றும் அவ்வளவு பிரமாதமான ஸ்டைல் இல்லை. ஓரங்கள் உடைந்த கரிச்சட்டியைக் கவிழ்த்ததுபோலிருக்கும் கிம்மின் ஹேர்கட்.


    மக்கள் அதனை "சீன கடத்தல்காரன் ஹேர்கட்" (Chinese smuggler haircut) என்று ரகசியமாகப் பெயரிட்டார்கள். வட கொரிய தொலைக்காட்சி, நீண்ட கூந்தலுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தாலும், இப்படி ஒரு ஆணை இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் என்ன ஹேர்கட் வைத்திருக்கலாம் என்பதில் அங்கே கட்டுப்பாடுகள் உள்ளன.

    என் முடி, என் உரிமை என்றெல்லாம் அங்கே பேசமுடியாது. 2013 ஆம் ஆண்டில், வடகொரியாவின் தலைவர் கிம் முடி வெட்டுதல் கட்டுப்பாட்டு பட்டியலை அறிமுகப்படுத்தினார். சிகையலங்கரிப்பு நிலையங்களில், ஆண்களுக்கு 10 விதமாகவும், பெண்களுக்கு 18 விதமாகவும் மட்டுமே தலைமுடியை வெட்ட முடியும். 

    2. கிப்பும்ஜோ (Kippumjo) அல்லதுஇன்பப் படை



    கொரியாவின் உயர்மட்ட கட்சி அதிகாரிகள் மற்றும் புகழ்பெற்ற விருந்தினர்களின் பாலியல் தேவைகளை வழங்குவதற்காக , பராமரிக்கப்படும் சுமார் 2,000 பெண்கள் கொண்ட குழு ஒன்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குழு கிப்பும்ஜோ அல்லது இன்ப படைப்பிரிவு என்று அழைக்கப்படுகிறது.  



    கிம்மின் தந்தை இறந்த பின்னர் இந்த குழு கலைக்கப்பட்டதாக நம்பப்பட்டது. ஆனால் 2015 ஆம் ஆண்டில் கிம் ஜாங்-உன் 13 அல்லது 14 வயதிற்குட்பட்ட சிறுமிகளை இக்குழுவுக்கு நியமிப்பதாக தெரியவந்துள்ளது. சான்றிதழ் பெற்ற கன்னிப்பெண்களையே இக்குழுவில் இணைத்துக்கொள்வார்கள். இந்தப்பெண்களில் பலர் தங்கள் இருபதுகளில் "ஓய்வு பெற்றவர்கள்" ஆக அறிவிக்கப்பட்டு இராணுவ அதிகாரிகளுடன் திருமணம் செய்து வைக்கப்படுவார்கள்.





    3. கிம்மின் கூடைப்பந்தாட்ட ஆர்வம்



    சுவிட்சர்லாந்தில் தனது பள்ளி நாட்களில், அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரரான மைக்கேல் ஜோர்டானிடம் (Michael Jordan) ஈர்க்கப்பட்டார் கிம். அவரது சுவிஸ் பள்ளியின் முன்னாள் நண்பர் ஒருவர் கிம்மின் அறை கூடைப்பந்தாட்ட சாதனங்களால் நிரம்பியிருப்பதை நினைவுகூருகிறார்.

    பிரபல அமெரிக்க முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரரான டென்னிஸ் ரோட்மேன் (Dennis Rodman), கிம்மின் அழைப்பின் பேரில், ஹார்லெம் குளோபிரோட்டர் (Harlem Globetrotter) அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களுடன் 2013 இல் வட கொரிய சுற்றுப்பயணம் சென்றார். கிம்மின் கூடைப்பந்தாட்ட ஆர்வம் டென்னிஸ்ஸுடன் நட்பைத் தொடரச் செய்தது.

    2019 ஆம் ஆண்டில் அணு ஆயுதப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக “பிரபல கூடைப்பந்தாட்ட வீரர்களை அறிமுகம் செய்து வைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் கிம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. கிம்மின் தந்தை முன்னர் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் ஜோர்டானை அவரது ஆட்சிக் காலத்தில் சந்திக்கக் கோரியதாகவும், ஆறு முறை அதை ஜோர்டான் வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. 

    4. தாக்கப்பட்ட தென்கொரிய போர்க்கப்பல்



    2010 இல், கிம் தனது தந்தையிடமிருந்து பொறுப்பேற்பதற்கு முன்பு, தென் கொரிய போர்க்கப்பலான ROKS சியோனன் (ROKS Cheonan) இரு நாடுகளின் கடல் எல்லைக்கு அருகே 104 பணியாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அதனை மூழ்கடித்து, தென் கொரிய மாலுமிகள் நாற்பத்தாறு பேரை கொன்றதில், கிம்மின் முக்கிய பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், கிம் தனது அடுத்த இராணுவ பொறுப்புகளை ஏற்பதற்கு சான்றாக உதவ நடாத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து சர்வதேச வல்லுநர்கள் விசாரித்தபோது, போர்க்கப்பல் வட கொரிய நீருக்கடியிலான ஏவுகணையால் தாக்கப்பட்டு மூழ்கியிருப்பதைக் கண்டறிந்தனர். வட கொரியா இதனை மறுத்து, இதனைக் கண்டுபிடுக்க விசாரணைக்கு உதவ முன்வருவதாக தெரிவித்தது.  கோபமடைந்த தென் கொரியா பொருளாதாரத் தடைகளை விதித்தது. சீனாவும் ரஷ்யாவும் தென் கொரியாவின் கூற்றுக்களை நிராகரித்தன. இன்று வரை, சியோனன் ஏன் மூழ்கியது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

    5. மதுப்பிரியர் கிம்


    தனது தந்தையைப் போலவே, கிம் விருந்துகளில் ஆர்வமுள்ளவர். அவர் மிக ஆடம்பரமான சுவைகளுக்கு அடிமையானவர். ஜானி வாக்கர் விஸ்கி மற்றும் ஹென்னெஸி ஜின் என்றால் கிம் உயிரைவிடுவாரம். கிம் வட கொரியாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து மது இறக்குமதி அதிகரித்துள்ளது.

    இரவுநேர குடியினால், காலையில் தலைவலியுடனே எழுவது கிம்க்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. உடனே வடகொரிய விஞ்ஞானிகளுக்கு வேலை வந்தது. அதன் பயனாக, 2016 இல் ஒரு புரட்சிகர ஹேங்கொவர் இல்லாத மதுபானத்தை உருவாக்கியதாகக் வட கொரிய விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

    6. தனியார் சொகுசு தீவு 



    முன்னாள் அமெரிக்க கூடப்பந்து நட்சத்திரம் டென்னிஸ் ரோட்மேன் கிம்முடன் ஒரு நட்பை உருவாக்கி 2013 இல் வட கொரியாவுக்கு விஜயம் செய்தார். பின்னர், ரோட்மேன் கிம்மின் தனியார் தீவைப் பற்றி "அது ஹவாய் தீவு அல்லது இபிசா போன்றது. ஆனால் கிம் மட்டுமே அங்கு வசிக்கிறார்." என்று கூறியிருந்ததின் பின் கிம்மின் சொகுசு தீவைப்பற்றி உலகிற்கு தெரிய வந்தது. ரோட்மேன் மேலும் அந்த தீவுக்கு கிம்மின் 95-அடி படகில் பயணித்து சென்றதாகவும், அங்கே காக்டெய்ல் மற்றும் பலவகை உணவுகளுடன் “ஏழு நட்சத்திர விருந்துஒன்றை அனுபவித்ததாகவும் கூறினார்.

    அந்த மர்ம தீவின் இருப்பிடம் ஒருவருக்கும் சரியாகத் தெரியவில்லை. அது 24 மணி நேர ஆயுதப்படைகளுடன் கூடிய வளைகுடாவைக்  கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அது வொன்சன் துறைமுகத்திற்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad