பிறேஸிலில் இருந்து வருகிறவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை
உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் ஆளானோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் பிறேஸில் நாட்டில் இருந்து வருகிறவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு வெள்ளை மாளிகை அதிரடியாக தடை விதித்துள்ளது.
இதையொட்டி வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், “வெளிநாட்டினரின் நுழைவை தடுத்து நிறுத்துவதின் மூலம் நமது நாட்டைப் பாதுகாக்க ஜனாதிபதி தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி பிறேஸிலில் சமீபத்தில் 14 நாட்கள் இருந்த வெளிநாட்டினர் அமெரிக்கா வர பயண தடை விதிக்கப்படுகிறது”
என கூறப்பட்டுள்ளது.
பிறேஸிலில் இருந்த வெளிநாட்டினர், அமெரிக்காவில் கூடுதல் தொற்றுக்கான ஆதாரமாக மாறாமல் இருக்க இந்த நடவடிக்கை உதவும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு 28 ஆம்ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை