• Breaking News

    கருப்பினத்தவர் கொலையால் கலவர பூமியாக மாறும் அமெரிக்கா




    அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில்கடந்த 25-ஆம் திகதிஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரைசந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொலிஸ் அதிகாரி ஒருவர்அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில்ஜார்ஜ் பிளாய்டுசம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்இதையடுத்துபொலிஸாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துமின்னபொலிசில் உட்பட   பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

    மினசோட்டா,ஜார்ஜியா,ஓஹியோ,கொளராடோ,விஸ்கான்சின்,கென்டக்கி,உட்டா,டெக்சாஸ்,கொலம்பியா ஆகிய மாநிலங்களில் நிலமை மோசமாக உள்ளது போராட்டங்கள் வெடித்து உள்ளன இந்நிலையில்ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலிஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டுஅவர்மீதுகொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையேமின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தநேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல்நேற்று காலை, 6:௦௦ மணி வரைஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.


    இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல்ஆயிரக்கணக்கான மக்கள்தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்உணவகம்வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டனபல மணி நேரமாக எரிந்த தீயைதீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.

    இதற்கிடையேமின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தஅமெரிக்க இராணுவத்தின் பொலிஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் லாஸ் வேகாஸ்லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில்போராட்டம் தீவிரமடைந்துள்ளதுபுரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதுபொலிஸா ர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.ஹூஸ்டனில் நடந்த பேரணியில்ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad