• Breaking News

    கொரோனா குப்பைகளால் மாசுபடும் கடற்படுகை ஆர்வலர்கள் எச்சரிக்கை



    கொரோனா
    வந்து சில மாதங்கள்தான் ஆகின்றன, அதற்குள் மக்கள் பயன்படுத்திவிட்டு வீசியெறிந்த முககவசங்களும்,  கையுறைகளும் மத்திய தரைக்கடல் படுகையில் குப்பையாக குவிந்துள்ளன. பிரான்ஸின்  ஆபரேசன் கிளீன் சி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கடற்படுகை எப்படி கொரோனா குப்பைகளால் மாசுபட்டுள்ளது என்பதைக் காண முடிகிறது.

    அந்த அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான லாரன்ட் லோம்பார்ட் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து, இந்த ஆண்டு கொரோனாவுடன் நீங்கள் கடலில் குளிக்க விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த புதுவகை மாசுவை தவிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கூறும் லோம்பார்ட், இது ஆரம்பம்தான் என எச்சரிக்கிறார்.

    ஒரு பெரிய புயல் வரும்போது, நாம் பயன்படுத்திவிட்டு வீசி எறிந்த அத்தனை கையுறைகளும் மாஸ்குகளும் கடலுக்குள் சென்று சேரப்போகின்றன என்கிறார் அவர்.  விரைவில் மத்தியதரைக்கடலில் ஜெல்லி மீன்களைவிட அதிகம் மாஸ்குகள் குவிந்திருக்கும் ஒரு பெரிய அபாயம் நேரிடப்போகிறது என்கிறார். மாஸ்குகள் மண்ணோடு மண்ணாக மட்கிப்போக 400 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், அவை சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad