• Breaking News

    'விமானத்தில் கொரோனா பரவ வாய்ப்பில்லை'


      
    விமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளதாவது: விமானங்களில்  வைரஸ் அல்லது இதர நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. ஏனெனில்  விமானத்திற்குள்  வடிகட்டிய நிலையில் தான் காற்று சுழல்கிறது. அதேசமயம்  விமானத்தில்  சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிரமம் என்பதால்  கொரோனா தாக்குதலுக்கான வாய்ப்பும் உள்ளதை மறுப்பதற்கில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளது.
    விமான பயணங்களில்  இரு இருக்கைகளுக்கு நடுவே  ஒரு இருக்கையை காலியாக விட வேண்டும் என  இம்மையம் வெளியிட்டுள்ள பயண விதிமுறைகளில் வலியுறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad