• Breaking News

    இங்கிலாந்துக்குச் செல்கிறது மேற்கு இந்திய கிறிக்கெற் அணி


      
    இங்கிலாந்து -  மேற்கு இந்திய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் ஜூன் 4 முதல் 29-ந் திகதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டத்திற்கு தடை விதித்துள்ளதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த இந்த டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் போட்டிகள் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் ரூ. 3,553 கோடி நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து கிறிக்கெற் சபைத் தலைமை அதிகாரி டாம் ஹாரிசன் கூறியிருந்தார்.

      இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகிற 1-ந் திகதி முதல் விளையாட்டு போட்டிகளுக்கு படிப்படியாக அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில், போட்டியை நடத்தலாம், கொரோனா வைரஸ் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, சில அறிவிப்புகள் இங்கிலாந்து கிறிகெற் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டது. மேற்கு இந்திய தொடருக்கான பயிற்சியை இங்கிலாந்து வேகப்பந்து வீரர்கள் தொடங்கினர். இந்நிலையில் மேற்கு இந்திய கிறிகெற் அணி வருகிற 8-ஆம் திகதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த அணி 3 டெஸ்ட்களில்  விளையாடுகிறது. இதுகுறித்து மேற்கு இந்திய  கிறிகெற் சபையின் தலைமை செயல் அதிகாரி ஜானி கிரேயு கூறுகையில்,

    இங்கிலாந்து கிறிகெற் அபையுடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களும் தங்களுடைய திட்டங்களின் இறுதி வடிவத்தில் உள்ளார்கள். இதனால் இங்கிலாந்து அரசின் ஒத்துழைப்பை அவர்களால் பெற முடியும்.

    இந்த மாத இறுதியில் இங்கிலாந்து  கிறிகெற்  சபை எங்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கும்.  முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு 4 வார காலம் எங்களுக்குத் தேவைப்படும். எனவே, அடுத்த மாதம் ஜூன் 8 ஆம் திகதி எங்களுடைய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஜூலை 8, ஜூலை 16, ஜூலை 24 ஆகிய  திகதிகளில் டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  என்றார்..
    இங்கிலாந்து - மேற்கு இந்திய அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad