வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்.. தயாரிப்பாளர் மீது பிரபல நடிகர் புகார்!
வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை
படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள்
வெளிபடுத்தியா மீடூ புகாரை ஆன்
ஒருவர் வெளிப்படுத்தியது திரை உலகை
அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல நடிகைகள் பட
வாய்ப்புக்காக தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள்
ஆகியோர் தங்களை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக
மீடூ என்ற அமைப்பை உருவாக்கி நடிகைகள் பலரும் பாலியல் ரீதியாக தாங்கள்
பாதிக்கப்பட்ட சம்பவங்களை புகாராக கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஹாலிவுட்டில்
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
ஆனால் கோலிவுட், பாலிவுட் உட்பட இந்திய
சினிமாவில் மட்டும் தான் குற்றம்சாட்டும் பிரபலங்கள் ஓரம் கட்டப்படுவதாக நடிகைகள்
ஆதங்கப்பட்டு வருகின்றனர். தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியிலான தொல்லைகளை
கூறுபவர்களை சினிமாத்துறை ஒதுக்குவதாகவும் அதன்பிறகு அவர்களுக்கு பட வாய்ப்புகள்
கொடுக்கப்படுவதில்லை என்றும் நடிகைகள் வேதனைப்பட்டு வருகின்றனர். விக்கி டோனர்
இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் முதல் முறையாக தான் பாலியல் தொல்லைக்கு ஆளானது
குறித்து பேசியிருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா. விக்கி டோனர்
படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு நடிகராக அறிமுகமானவர் ஆயுஷ்மான் குரானா. பிகினி
போட்டோவை போட்டு கிளாமரை… தன் வாழ்க்கையை கெடுத்த திருமணமான… வாய்ப்பு தேடிய போது
தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள ஆயுஷ்மான் குரானா, தேசிய விருதுகள்,
பிலிம் பேர் விருதுகள் என பல விருதுகளை குவித்துள்ளார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள
குரானா, ஆரம்ப காலத்தில் தான் பட வாய்ப்புக்காக அலைந்த போது ஒரு தயாரிப்பாளர்
தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார். படுக்கைக்கு அழைப்பு பட வாய்ப்பு
கேட்டு ஒரு ஆண் தயாரிப்பாளரை அணுகிய போது தனக்கு பட வாய்ப்பு தருவதாக உறுதியளித்த
அவர், அதற்கு ஈடாக தன்னுடன் படுக்கையை ஷேர் செய்ய வேண்டும் என கேட்டதாக
கூறியுள்ளார். மேலும் அந்த தயாரிப்பாளர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி
செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னால் அதனை சகித்துக்கொள்ள முடியவில்லை
என்றும் அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் அல்ல இதுபோன்று பல கசப்பான சம்பவங்களை தன்னுடைய வாழ்க்கையில்
சந்தித்தாகவும் ஆயுஷ்மான் குரானா கூறியுள்ளார்.
பிரபல
பாலிவுட் நடிகரான ஆயுஷ்மான் குரானா தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு
அழைத்ததாக கூறியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே
ஆயுஷ்மான் குரானா அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ள குலாபோ சித்தாபோ படம்
வரும் ஜூன் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை