பிடித்த நடிகரின் திருமணத்தால் மனமுடைந்த மீனா
90 களில்
மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான மீனா, தற்போது
இரண்டாம் சுற்றுக்குத் தயாராகிவிட்டார். மீனாவின் மகள் நைனிகா, விஜய்யின் ’தெறி’
படத்தில் நடித்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
மீனா, சமீபத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் இருக்கும் ஒரு பழைய படத்தைப் பகிர்ந்து, தான் ஹ்ரித்திக்கின் மிகப்பெரிய ரசிகை எனக்குறிப்பிட்டுள்ளார்.ஹிருத்திக்
ரோஷனின் திருமண விருந்தில் எடுத்த
புகைப்படத்தை வெளியிட்டு, ‘எனது இதயம் உடைந்த நாள். பெங்களூரில் எனக்கு மிகப்பிடித்தவரை
அவரது திருமணத்தில் சந்தித்தேன்” எனப்பதிந்துள்ளார்.
தற்போது சிவா
இயக்கும், ரஜினிகாந்தின் ’அண்ணாத்தை’யில் மீனா பணியாற்றி வருகிறார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு
ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
மேலும், சூரி மற்றும் சதீஷ் முக்கிய
வேடங்களில் நடிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை