• Breaking News

    ரோஹித் சர்மாவின் கவலை



    உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய அணிகளுக்கும் அதன் வீரர்களுக்கும் உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளிலுள்ள சில மைதானங்களில் உள்ளூர் அணியை விடவும் இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைத்த தருணங்கள் எல்லாம் உண்டு. ஆனால், பக்களாதேஷில் இந்திய கிறிக்கெற் அணிக்கு ரசிகர்கள் இல்லை என பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பாலுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

     இதுபற்ரி ரோஹித் மேலும் தெரிவிக்கையில்,


    இந்தியாவிலும் பங்களாதேஷிலும் உணர்ச்சிமிக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் நாம் தவறு செய்யும்போது எல்லா முனைகளிலிருந்தும் கண்டிப்பார்கள். பங்களாதேஷில் விளையாடச் செல்லும்போது நம்பமுடியாத காட்சியாக இருக்கும்.

     ரசிகர்களின் ஆதரவின்றி இந்திய அணி எங்கும் விளையாடுவதில்லை. ஆனால் பங்களாதேஷில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போதுள்ள பங்களாதேஷ் அணி வீரர்களான நீங்கள் அனைவரும் மிகவும் தீவிரமாக விளையாடுகிறீர்கள். 2019 உலகக் கோப்பையில் அனைவரும் அதைப் பார்த்தார்கள் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad