தெருக்களில் மருந்து தெளிப்பதால் கொரோனா வைரஸ் சாகாது - உலக சுகாதார அமைப்பு
கொரோனா
வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதில் நோய்
பரவாமல் தடுக்க தெருக்களில் கிருமி நாசினி ,மருந்துகள் என்பன தெளிக்கப்படுகின்றன. விமான நிலையங்களில்
இதற்கென விஷேட பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரஸ் அழிக்க முடியாது
என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது
குறித்து அந்த அமைப்பு கூறி இருப்பதாவது:-
தெருக்கள்
, மல்கள் போன்ற பகுதிகளில் கிருமி நாசினி ,மருந்துகள் தெளிப்பதால் கொரோனா வைரஸ் அல்லது
மற்ற நோய் கிருமிகளை அழிக்க முடியாது. ஏனென்றால் கிருமி நாசினிகள் அழுக்கு மற்றும்
குப்பைகளால் செயலிழக்கப்படுகின்றன.
நோய்
கிருமிகளை செயல் இழக்க செய்யும் நேரத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் இரசாயன தெளிப்பு
அனைத்து மேற்பரப்புகளையும் போதுமானதாக செல்ல வாய்ப்பில்லை. அதே வேளையில் கிருமி நாசினிகள்
அதிக அளவு சாலையில் தெளிப்பது மக்களின் உடல் நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
அதேபோல்
எந்த சூழ்நிலையிலும் தனி நபர்கள் மீது கிருமி நாசினி தெளிக்க பரிந்துரைக்கப்படவில்லை.
மக்கள் மீது கிருமி நாசினி தெளித்தால் உடல் பாதிப்புகள் ஏற்படும். இது உடல் ரீதியாகவும்,
உளவியல் ரீதியாகவும் தீங்கை விளைவிக்கும். பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகள் மற்றும்
தொடர்பு மூலம் வைரஸை பரப்பும் திறனை குறைக்காது.
மக்கள்
மீது குளோரின் மற்றும் பிற நச்சு ரசாயனத்தை தெளிப்பது கண், தோல் எரிச்சல், மூச்சு குழாய்
அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.கிருமி நாசினி பயன்படுத்த வேண்டுமென்றால் ஒரு
துணியால் செய்யப்பட வேண்டும். கிருமி நாசினி நனைக்கப்பட்ட துணியால் துடைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை