• Breaking News

    ஜேர்மனியில் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பம்


    கொரோனா வைரஸ் காரணமாக  உலகின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.ஒலிம்பிக்,ஃபிஃபா தகுதிகாண்போட்டிகள்,ஐபிஎல் போன்றவை உடபட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
    மார்ச் மாதத்தில் இருந்து உதைபந்தாட்டப்  விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளை  கொரோனா வைரஸ் சின்னபின்னமாக்கிய போதிலும் ஜேர்மனி நாடு தழுவிய லாக்டவுன் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அந்நாட்டின் முதன்மை கால்பந்து லீக்கான பண்டேஸ்லிகா, அணி வீரர்களை தயார்படுத்தியது. கடந்த சில நாட்களாக வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில்  இன்று  பண்டேஸ்லிகா உதைபந்தாட்டப்  போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒரே நாளில் ஆறு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகள்   இரவு ஏழு மணிக்கு தொடங்குகின்றன. அனைத்து போட்டிகளும்  தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த வேண்டும், ஐந்து மாற்று வீரர்களை பயன்படுத்தி கொள்ளலாம், வீரர்கள் மிகப்பெரிய அளவில் உடல் அளவில் தாக்கக்கூடாது ஆகிய கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடக்கின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad