ஹிந்தி தெரியாததால் வாய்ப்பை இழந்த ஆத்மிகா
ஹிந்தி
மொழி பேச தெரியாததால் முன்னணி இயக்குனர் ஒருவரின் பட வாய்ப்பை இழந்ததாக இளம் நடிகை
ஆத்மிகா தெரிவித்துள்ளார்.
ஹிப்ஹாப்
ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார்.
இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் கைவசம், நரகாசுரன்,
கண்ணை நம்பாதே, காட்டேரி போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில் ஹிந்தி பேச தெரியாததால்
பாலிவுட் பட வாய்ப்பை இழந்ததாக ஆத்மிகா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
பாலிவுட்டில்
முன்னணி இயக்குனராக இருக்கும் ஆனந்த் எல் ராயின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அந்த கதாபாத்திரத்திற்கு தமிழ், இந்தி என இரு மொழிகளும் பேச தெரிந்த நடிகை தான் வேண்டும்
என கூறியதால் அப்பட வாய்ப்பு கைநழுவியது. தற்போது
ஹிந்தி கற்று வருகிறேன் என கூறியுள்ளார். ஆனந்த் எல் ராய், ஹிந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தை இயக்கியவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை