• Breaking News

    பாகிஸ்தான் விமான விபத்தில் பிரபல மொடல் அழகி மரணம்


      
    கராச்சியில் நேற்று விழுந்துநொறுங்கிய  விமானத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி சாரா அபிட்டும் பயணம் செய்ததாக தெரிகிறது.  பிரபல ஆடை வடிவமைப்பாளர் காதிஜா ஷா டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டதன் மூலம் சாரா அபித் பயணம் செய்தது உறுதியாகியுள்ளது.

    காதிஜா ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று நடந்த விமான விபத்தின் மூலம் பேஷன் தொழில் சாரா அபிட்டை இழக்கிறது’’ என பதிவிட்டுள்ளார்.

    காதிஜா ஷாவைத் தொடர்ந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad