• Breaking News

    பேஸ்புக் பிற வலைத்தளங்களில் உங்கள் செயல்பாட்டை கண்காணிப்பதை எவ்வாறு தடுக்கலாம்?


    உங்கள் வலைத்தள செயல்பாடுகள் பற்றி, பேஸ்புக் தகவல்களை சேகரிக்கின்றது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் உங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வளவு, எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

    வலைத்தளங்களும் மொபைல் செயலிகளும் (Mobile Apps) பேஸ்புக்கின் பிக்சல் (Pixel) மற்றும் மென்பொருள் மேம்பாட்டு கிட் (SDK) ஐப் பயன்படுத்தி, உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களைச் சேகரித்து, அதை பேஸ்புக்கிற்கு அனுப்புகின்றன. இலக்கு விளம்பரங்களைக் காண்பிக்க பேஸ்புக் அந்த தகவலைப் பயன்படுத்துகிறது. பேஸ்புக் பாவனையாளர்கள் ஒரு பொருளைப் பற்றியோ அல்லது விடயத்தைப்பற்றியோ பிற தளங்களில் தேடியிருந்தாலோ, உரையாடல்களில் பங்குபற்றியிருந்தாலோ, அது சம்பந்தமான விளம்பரங்களை அடுத்த சில நாட்களில் தமது பேஸ்புக் செய்தி ஊட்டத்தில் காணலாம். இதனால் பேஸ்புக் பாவனையாளர்கள், தமது உரையாடல்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாக உறுதியாக நம்புகிறார்கள்.


    நீங்கள் இதனை நம்பவில்லை என்றால், கடந்த ஆகஸ்டில் பேஸ்புக் மீண்டும் அறிவித்த "ஆஃப்-பேஸ்புக் செயல்பாடு" (Off-Facebook Activity) உள்ளது. அதில், நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் அனைத்து தளங்களும் செயலிகளும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
    உங்களைப் பற்றி எந்த தளங்கள் பேஸ்புக்கிற்கு தகவல்களை அனுப்புகின்றன என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

    பேஸ்புக்கின் டெஸ்க்டாப் பதிப்பு / இணைய உலாவி மூலம்

      1. பேஸ்புக்கின் டெஸ்க்டாப் பதிப்பின் மேல் வலதுபுறத்தில் உள்ள படத்தில் குறுப்பிட்ட பொத்தானை தெரிவு செய்யவும்.



      2. விரிவாக்கிய இடத்துலிருந்து " Settings " ஐ தேர்ந்தெடுக்கவும்.

      3. இப்போது உங்கள் கணக்கு விபரங்கள் தெரியவரும். இடது புறத்தில், " Your Facebook Information. " என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

    4. இங்கு பேஸ்புக்குடன் தகவல்களைப் பகிரும் அனைத்து தளங்களின் பட்டியலையும் காணலாம்.
    நீங்கள் இந்த செயற்பாட்டை பின்வருமாறு கையாளலாம்
    • -   இந்த தகவலை உங்கள் கணக்கிலிருந்து நீக்கலாம்
    • -    குறிப்பிட்ட தளங்களுக்கான கண்காணிப்பை முடக்கலாம்
    • -    இந்த கண்காணிப்பை முழுமையாக முடக்கலாம்.

    நீங்கள் ’Turn Off’ செய்தாலும், பேஸ்புக் உங்கள் செயல்பாட்டைப் பற்றிய தகவல்களைப் பெறும், ஆனால் அது உங்கள் கணக்குடன் இணைக்கப்படாது. மேலும், இந்த வகை தரவுப்பகிர்வை முழுமையாக முடக்குவது என்பது பிற தளங்களில் உள்நுழைய (login) நீங்கள் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்த முடியாது என்பதாகும். அதாவது சில வலைத்தளங்கள் அல்லது செயலிகள் பயனாளர் கணக்கிற்காக பேஸ்புக் கணக்கின் மூலம் உள்நுழைய (Facebook Login) அனுமதிக்கும். அந்த வலைத்தளத்திலோ செயலியிலோ நீங்கள் புதிய கணக்கை திறக்கவேண்டியதில்லை. அப்படியான இடங்களில் கணக்குகள் அல்லது பயன்பாடுகளுக்கு புதிய உள்நுழைவை (new account and login) உருவாக்க வேண்டும்.

    கண்காணிப்பை முழுமையாக முடக்க
    5. வலது பக்கத்தில் உள்ள ‘Manage Future Activity’ ஐ தெரிவு செய்யவும்

    6. அதில் ‘Future Off-Facebook Activity’ ஐ Off செய்யவும்




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad