மதுப் போத்தலை மறைத்தவருக்கு வயிற்றுவலி
நாகை மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. 29 வயதான பக்கிரிசாமி மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டநிலையில் தினமும் குடிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் பக்கிரிசாமி.
இந்நிலையியல் சமீபத்தில் அளவுக்கு மீறி மதுகுடித்த பக்கிரிசாமி போதை தலைக்கேறிய நிலையில், கடைசி குவாட்டர் போத்தலை எங்கே பாதுகாப்பாக வைப்பது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். உடனே தன்னிடம் இருந்த மதுப்போத்தலை
எடுத்து தனது ஆசனவாயில் சொருகியுள்ளார்.
அதன்பின்னர் மதுபோதையில் அவர் போட்ட ஆட்டத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக ஆசனவாய் மூலம் வயிற்றுக்குள் சென்றுள்ளது. இதனால் அடுத்தநாள் கடும் வயிற்றுவலி ஏற்பட்டு உயிருக்கு போராடிய பக்கிரிசாமியை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பக்கிரிசாமியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் உள்ளே மதுபாட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின்னர் அறுவை சிகிச்சை இல்லாமல், இனிமா கொடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மதுபாட்டிலை வெளியே எடுத்து பக்கிரிசாமியை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
கருத்துகள் இல்லை