வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான .பாரதிக்கு இடைக்கால பிணை வழங்கியது நீதிமன்றம்
திமுக
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவரது இல்லத்தில் இன்று அதிகாலை பொலிஸாரால் அதிரடியாக
கைது செய்யப்பட்டார். அவருக்கு எழும்பூர் நீதிமன்றம், இடைக்கால பிணை வழங்கியது
ப்ட்டியலின
மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சமூக ஊடகங்களில்
ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது . அன்பகத்தில்ல் பேசிய அவரது உரையில், தாழ்த்தப்பட்டோருக்கு
நீதிபதி பதவியிடங்கள் கிடைக்க திமுக காரணம் என கூறியிருந்தார். அப்போது சர்ச்சைக்குரிய
ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தியிருந்தார்.
இதுகுறித்து
ஆதித்தமிழர் மக்கள் பேரவை தலைவர், கல்யாண், மார்ச் மாதம், காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டுக்கு
இன்று அதிகாலை சென்ற மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான பொலிஸார் அவரை கைது
செய்து அழைத்துச் சென்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளின்கீழ் அவர்
மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. பொலிஸார் அழைத்துச் செல்லும் போது நிருபர்களிடம் பேசிய
ஆர்.எஸ்.பாரதி, பிப்ரவரி 15ஆம் தேதி நான் பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டது.
அதற்காக இப்போது வந்து கைது செய்வது உள்நோக்கமுடையது.
நான்
சமீபத்தில் கொரோனா உபகரணம் வாங்கியது தொடர்பாக ஊழல் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தேன்.
இதற்கான ஆதாரங்களை திரட்டினேன். இதற்காகத்தான் நான் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்
என்று நினைக்கிறேன். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக என்னை கைது செய்துள்ளார்கள்.
சீப்பை ஒழித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை
நிறுத்த முடியாது. கொரோனா ஊழலுக்கு எதிராக புகார் அளிக்கப்படும். நான் வீட்டில் என்னை
தனிமைப் படுத்திக் கொண்டிருந்தேன் . இந்த சூழ்நிலையில் என்னைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
இதனிடையே,
எழும்பூர் நீதிமன்றத்தில், நீதிபதி செல்வகுமார் முன்னிலையில், ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிட்ட வக்கீல்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில்,
இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு புதன்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது தேவையற்றது. அதுவும், கொரோனா காலத்தில்,
இதுபோன்ற கைது தேவையில்லை என வாதிட்டனர். இதையேற்ற நீதிபதி, மே 31 ஆம் திகதி வரை, இடைக்கால
பிணை வழங்கி உத்தரவிட்டார். எனவே ஜூன் 1ம் தேதி வழக்கமான ஜாமீனுக்கு விண்ணப்பிக்க ஆர்.எஸ்.பாரதி
தரப்பு முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை