• Breaking News

    இலங்கையில் விளையாட இந்தியா தயார்


    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிறிக்கெற் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (.சி.சி.) போட்டி அட்டவணையின் படி இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று  ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட வேண்டும். கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால் இலங்கை பயணம் குறித்து இந்திய கிறிக்கெற் வாரியம் இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் இருந்து வருகிறது.

    இதற்கிடையில், இந்திய கிறிக்கெற் வாரியத்துக்கு, இலங்கை கிறிக்கெற் வாரியம் சார்பில் சமீபத்தில் கடிதம் எழுதப்பட்டது. அதில்தனிமைப்படுத்துதல் வழிமுறைகள் உள்பட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்கவும், ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டி தொடரை நடத்தவும் தயாராக இருக்கிறோம். இந்திய கிறிக்கெற் அணி ஜூலை மாதம் இறுதியில் இலங்கை வந்து ஒருநாள், 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட வேண்டும்என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இலங்கை கிறிக்கெற் வாரியத்தின் கோரிக்கைக்கு இந்திய கிறிக்கெற் வாரியம் சாதகமான பதிலை அளித்து இருக்கிறது. மத்திய அரசு அனுமதி அளித்தால், இந்திய கிறிக்கெற் ட் அணி இலங்கை சென்று விளையாட தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய கிறிக்கெற் வாரிய பொருளாளர் அருண் துமால் கருத்து தெரிவிக்கையில், ‘ஊரடங்கு தளர்வுகள் மற்றும் பயண கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியே இந்திய கிறிக்கெற் வாரியம் முடிவு எடுக்கும். இந்திய கிறிக்கெற் அணி வீரர்களின் பாதுகாப்பு, சுகாதார விஷயத்தில் எந்தவித குறைபாடும் இல்லை என்றால் இலங்கை சென்று விளையாட இந்திய அணி தயார். வீரர்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad