• Breaking News

    மலிவுவிலை வெண்டிலேட்டர் உருவாக்கி இந்திய தம்பதி சாதனை


    கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்து வருகிறது.

     கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குகிறபோது நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரல் பாதிக்கப்படுகிறபோது, சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறது. சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறபோது மரணம் நேருவதற்கான ஆபத்து கண் எதிரே இருக்கிறது.

    இப்படிப்பட்ட நிலையில் வெண்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாசக்கருவி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கருவியானது நுரையீரலுக்கு சுவாச காற்றை செலுத்துகிறது, வெளியேற்றுகிறது. எனவே உடல்ரீதியாக இயற்கையாக சுவாசிக்க முடியாத நோயாளிகளுக்கு செயற்கையாக சுவாச காற்றோட்டத்தை வழங்க இந்த வெண்டிலேட்டர் உதவுகிறது.

    இந்த வெண்டிலேட்டரின் விலை அதிகம். அமெரிக்காவில் 10 ஆயிரம் டாலர்   என்கிறார்கள். தவிரவும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் தேவையை சமாளிக்கக்கூடிய அளவுக்கு நினைத்த உடனேயே தேவையான எண்ணிக்கையில் எளிதாக தயாரித்து விடவும் இயலாது. இதற்கு உலகமெங்கும் பற்றாக்குறைதான் நிலவி வருகிறது..

    இந்த நிலையில்  அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன், குமுதா ரஞ்சன் தம்பதியர்   மலிவு விலை வெண்டிலேட்டரை உருவாக்கி அசாத்திய சாதனையை ஓசைப்படாமல் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

    தேவேஷ் ரஞ்சன், ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தின் ஜார்ஜ் உட்ரப் மெகானிக்கல் என்ஜினீரியங் கல்லூரியின் பேராசிரியர். அவரது மனைவியான குமுதா ரஞ்சன், அட்லாண்டா நகரில் டாக்டராக இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்துதான் 3 வார காலத்தில் மலிவுவிலை வெண்டிலேட்டரை உருவாக்கி இருக்கிறார்கள். 100 டொலருக்கும் குறைவான  விலையில் இந்த வெண்டிலேட்டரை உருவாக்கி விட முடியும் என்கிறார்கள். 500 டொலர் விலைக்கு விற்றால்கூட   தயாரிப்பு நிறுவனம் நல்ல லாபம் சம்பாதிக்க இயலுமாம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad