• Breaking News

    முகக்கவசம் அணிந்து ஜாகிங் செல்வது உயிருக்கு ஆபத்து!



    உலகமே உகக் கவசத்துள் மறைந்திருக்கிறது. கொரோனா
    வைரஸை தடுக்க பல்வேறு நாடுகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முகக்கவசத்தை பல மணி நேரம் அணிந்திருப்பதும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கிறார்கள்.

      சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சாங் பிங் என்பவர் முகக்கவசம் அணிந்த படி கடந்த ஒரு வாரமாக 6 கி.மீ வரை ஜாகிங் சென்றுள்ளார்.   சில தினங்களுக்கு முன் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம்ம் நெஞ்சு வலியும் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

    உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதித்து பார்த்ததில் அவரது இடது நுரையீரலில் துளை உண்டாகியிருந்தது. அறுவை சிகிச்சை மூலம் அது சரி செய்யப்பட்டு தற்போது சாங் பிங் உயிர் பிழைத்துள்ளார்.

    இதற்கான காரணம் குறித்து விவரித்த மருத்துவர்கள், 'முகக்கவசம் அணிந்தபடி தினமும் 6 கி.மீ ஜாகிங் சென்றதால் நுரையீரலுக்கு போதுமான ஒட்சிசன் கிடைக்காமல் கடும் அழுத்தம் ஏற்பட்டு இறுதியில் நுரையீரல் செயல்பாட்டையே பாதித்துவிட்டது. கடுமையான உடற்பயிற்சியின் போது முகக்கவசத்தை தவிர்க்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad