• Breaking News



    கொரோனா அச்சுறுத்தலால் இடை நிறுத்திவைக்கப்பட்ட விளையாட்டுகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளன.  உதைபந்தாட்ட,கிறிக்கெற்,டென்னிஸ் வீர வீராங்கனைகள் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

    லாலிகா போட்டிகள் மீண்டும் தொடங்க இருப்பதால் பார்சிலோனா, ஆர்ஜென்ரீனா கப்டன் லியோனல் மெஸ்சி  ஸ்பெயினில் கொரோனா வைரஸ் ஊரங்கிற்கு பல வாரங்களுக்குப் பிறகு பார்சிலோனா அணியுடன் மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார்,  

      அடிடாஸ் இணையதளத்திற்கு அளித்தபேட்டியில் மெஸ்சி கூறியதாவது:-

    பார்வையாளர்கள் இன்றி விளையாடுவது அன்றாட பயிற்சிக்குச் செல்வது போல, உங்கள் அணியினரைப் பார்ப்பது, உங்கள் முதல் சில ஆட்டங்களில் விளையாடுவது போன்றது. முதலில் இது விசித்திரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நான் விளையாட எதிர்பார்த்திருக்கிறேன்.

    மூடிய கதவுகளுக்குப் பின்னால் விளையாடுவது "தொடர்ச்சியான சவால்களைக் குறிக்கிறது. ரசிகர்கள் இல்லாமால் விளையாடுவது வித்தியாசமானது.அதற்கு மன ரீதியாக தயாராக வேண்டும் என கூறினார்


      செக் குடியரசில் அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும்ஹார்டுகோர்ட் டிராடென்னிஸ் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் முன்னணி வீராங்கனை பெத்ரா குவித்தோவா, ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


    குவித்தோவா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

     
    வீரர்களான எங்களுக்கு ரசிகர்கள் தான் இன்ஜின்கள். அவர்கள் தருகின்ற உற்சாகமும், ஆரவார வரவேற்பும் தான் எங்களை விளையாட தூண்டுகிறது. களத்தில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது எனக்கு அழகாகத் தெரியவில்லை. அப்படி விளையாடும் போட்டிகளை கிராண்ட்ஸ்லாம் என்றும் சொல்ல முடியாது. ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதை விட அவற்றை ரத்து செய்து விடுவது நல்லது என பதிவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad