காதலருடன் சென்ற நியூஸி. பிரதமரை திருப்பி அனுப்பிய ஹோட்டல்!
காபி கிளப்புக்கு
தனது காதலருடன் வந்த நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு உள்ளே உட்கார சீட்
இல்லை என்று கூறி ஹோட்டல் நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இருப்பினும் பின்னர் இடம்
கிடைத்ததைத் தொடர்ந்து ஜெசிந்தா தனது காதலருடன் உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பினார்.
உலகின் பிற நாடுகளைப் போலவே நியூஸிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு
1498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதில் 1428 பேர் குணமாகி விட்டனர்.
21 பேர் மரணமடைந்துள்ளனர். 49 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். அங்கு கடும் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டதால் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நன்றாக கட்டுக்குள் வந்து விட்டதால்
அந்த நாட்டில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமும்
அதிகரித்துள்ளது. அதன்படி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் எதையும் மேற்கொள்ளலாம்.
முகமூடி கட்டாயம். அதேபோல சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். லாக்டவுன் தளர்வுகளைத்
தொடர்ந்து மக்கள் நிம்மதியாக வெளிக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். சமூக இடைவெளியையும்
அரசு விதித்துள்ள விதிமுறைகளையும் கடைப்படித்தபடி தொழில்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
ஹோட்டல்களில் இத்தனை பேர்தான் அமர்ந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதை ஹோட்டல்கள் கடைப்பிடித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா
தனது காதலர் கிளார்க் கேபோர்டுடன் வெலிங்டனில் உள்ள ரெஸ்டாரென்ட்டுக்கு சென்றிருந்தார்.
ஆனால் அவர் அங்கு சென்றபோது ஹோட்டலில் சீட்கள் நிரம்பி விட்டிருந்தன. இதனால் உங்களை
உள்ளே அனுமதிக்க முடியாது என்று ஹோட்டல் நிர்வாகம் பிரதமருக்கு கூறியது. இதனால் அவர்கள்
ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் பின்னர் அவர்களுக்கு சீட் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு
அவர்கள் அமர வைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை