• Breaking News

    இரண்டு மனைவிகள் உள்ள வினோத கிராமம்


      

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் அனைத்து ஆண்களும் இரண்டு திருமணம் செய்யும் வினோத வழக்கம் நடைமுறையில் உள்ளது. அந்தக் கிராமத்து ஆஅண்கள் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள் என பக்கத்து கிராமங்களில் உள்ள ஆண்கள் பொறாமையுடன்  தெரிவிக்கிறார்கள்.


    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள தேரசர் என்ற கிராமம் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக வினோத வழக்கம் ஒன்றை இந்த கிராமத்து ஆண்கள் கடைபிடித்து வருகின்றனர். அதாவது திருமணமான அனைத்து ஆண்களும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். இந்த வழக்கம் பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்தில் பின்பற்றப்படுவதாகவும், மூதாதையர் காலம் தொட்டு தொடர்ந்து வருவதாகவும் தேரசர் கிராம ஆண்கள் கூறுகின்றனர்.  இது மத ரீதியாக செய்யப்படும் திருமணம் இல்லை என்றும், மதங்களை கடந்த தங்கள் கிராமக்கலாச்சாரம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தேரசர் கிராமத்தில் திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் அனைவரும் இரண்டாவது திருமணமும் செய்ய வேண்டும் என்பது அந்த ஊரின் எழுதப்படாத சட்டமாக உள்ளது. தேரசர் கிராமத்தில் இரண்டு திருமணங்கள் செய்வது இயல்பான ஒன்று என்பதால் அங்கு முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் சண்டை சச்சரவுகள், போட்டி பொறாமைகள், சக்களத்தி சண்டைகள் எதுவும் இருக்காது என்பது இதில் குறிப்பிடத்தக்கது. மேலும், குடிநீருக்காக நாள்தோறும் 5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும் என்றும், ஒரு மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, கர்ப்பம் தரித்தாலோ அவருக்கு பதில் மற்றொரு மனைவி வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்வார் எனவும் கூறுகின்றனர் பார்மர் மாவட்டத்தில் உள்ள தேரசர் கிராமத்தினர்.

    .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad