• Breaking News

    அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்கா முடிவு?


    அமெரிக்கா அணு ஆயுதம் சோதனை நடத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தில், “1992-க்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க அரசு அணு ஆயுத சோதனையில் ஈடுபட உள்ளதாக தற்போதைய அதிகாரி ஒருவரும், முன்னாள் அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளதாகசெய்திகள் வெளியிட்டுள்ளது.


    அணு ஆயுத சோதனை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளதாகவும், அந்த கூட்டம் கடந்த 15 ஆம் திகதி நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் அந்த நாடுகள் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தில் அதுபற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.


    ஆனாலும் அணு ஆயுத சோதனை நடத்துவதற்கான எந்த ஒரு உடன்படிக்கையுடன் கூட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அளிக்கும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக மற்ற நடவடிக்கைகளை எடுக்கவும், சோதனை மீண்டும் தொடங்குவதை தவிர்க்கவும் ஆலோசிக்கப்பட்டதாகவும், இது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க அதிகாரிகளை உடனடியாக அணுக முடியவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.


    இதற்கிடையே ஓபன் ஸ்கைஸ்ட்ரெட்டி என்ற ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா தன்னிச்சையாக வெளியேறுகிறது.


    இந்த ஒப்பந்தத்தின்படி செயற்கைகோள் மற்றும் விமானங்கள் மூலமாக நாடுகளின் படை வலிமை மற்றும் நிலைகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். ஒரு நாட்டின் ராணுவ தளவாடங்களை பிற நாட்டு விமானங்கள் அனுமதிக்க வேண்டும். இதனால் போர் பதற்றம் குறையும் என்பதால் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad