இரட்டையர்களுக்கு 'குவாரண்டைன்', 'சானிடைசர்' என பெயர் வைத்த பெற்றோர்
இந்தியாவின்
உத்தரபிரதேச மாநிலம்
மீரட் நகரைச் சேர்ந்த தம்பதியர்
தர்மேந்திர குமார், ரேணு
இவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளன.
மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்
விதமாக 62 நாட்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும்
வேளையில் மக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு
ஏற்படும் வகையில் தங்கள் குழந்தைகளுக்கு
'குவாரண்டைன்' என்றும் 'சானிடைசர்' என்றும் பெயிரிட்டுள்ளதாக அவர்கள்
தெரிவித்தனர்.
குழந்தைகள்
இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும். இந்த பெயர்கள் வாழ்நாள்
முழுவதும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் எனவும்
குழந்தைகளின் பெற்றோர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை