'க்ளைமேக்ஸ்' படத்தில் ஆடை களைப்பு.. நிர்வாண குளியல்.. சர்ச்சையில் இயக்குநர்
இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் க்ளைமேக்ஸ் படத்தின் டீசரில் செக்ஸ் காட்சிகள் பல இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த கவர்ச்சி நடிகையான மியா மல்கோவாவை வைத்து க்ளைமேக்ஸ் படத்தை உருவாக்கியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. மியா மல்கோவா, ராம்கோபால் வர்மாவுக்கு பிடித்த நடிகை ஆவார். இதனை ராம் கோபால் வர்மாவே பலமுறை கூறியிருக்கிறார். மியா மல்கோவா 2018ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் காட் செக்ஸ் ட்ரூத் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் பல நிர்வாண காட்சிகளில் அட்டகாசமாக நடித்திருந்தார் மியா மல்கோவா. இதானல் அந்தப்படம் சர்சையிலும் சிக்கியது.
இந்நிலையில் இந்தப் படத்திலும் அதேபோன்று பட்டைய கிளப்பியிருக்கிறார் மியா மல்கோவா என்பது படத்தின் டீசரை பார்த்தாலே தெரிகிறது. படத்தில் ஆடை களைப்பு, நிர்வாண காட்சிகள், முத்தம் போன்ற காட்சிகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளது.
க்ளைமேக்ஸ் படம் பாலைவனத்தில் செட் செய்யப்பட்ட ஒரு அச்சமூட்டும் ஆக்ஷன் படம் என்பது அதன் டீசரிலேயே தெரிகிறது. டீசரில் முழுக்க முழுக்க செக்ஸியாகத் தென்படுகிறார் மியா மல்கோவா. உள்ளே வராதீர்கள் என்று எச்சரிக்கப்பட்ட ஏரியாவுக்குள் ஒரு இளம் ஜோடி நுழைகிறது. அவர்களை பாலைவனத்தில் முகமூடி அணிந்த ஒரு கூட்டம் அவர்களை விரட்டுவதாக உள்ளது டீசர். மேலும் பாலைவனத்தில் உள்ள ஒரு குளத்தில் நிர்வாணமாக குளிக்கும் மியா, தனது காதலருக்கு முத்தம் கொடுப்பதும், உள்ளாடைகளையும் ஒவ்வொன்றாய் கழட்டுவதுமாய் முடிகிறது டீசர்.
நேற்று முன்தினம் வெளியான இந்த டீசரை இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெயிலர் விரைவில் ரிலீஸ் ஆகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலான காட்சிகள் பல இருந்தாலும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கருத்துகள் இல்லை