• Breaking News

    ட்ரோல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்


    இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த நான்கு ஆண்டுகளாக நயன்தாராவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இதை அவர்கள் தங்கள் சமூக ஊடகப்பதிவுகள் மூலம் வெளிப்படையாகவே உலகிற்கு தெரிவித்துள்ளனர்.





    அன்னையர் தினத்தை முன்னிட்டு, விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவை தனது 'வருங்கால குழந்தைகளின்' தாய் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்அந்தப்பதிவில், விக்னேஷ் தனது தாய்க்கும் நயன்தாராவின் தாய்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறந்த மேற்கோள்களையும் பகிர்ந்துள்ளார். 



    ஆனால் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத ஒருவர், இயக்குனரை கேலி செய்து பின்னூட்டம் இட்டுள்ளார். அதற்கு, விக்னேஷ் சிவன் அவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவரது தாயை இவ்வளவு நல்ல நடத்தை உடைய, கனிவான மனிதனைப் பெற்றெடுத்ததற்காக பாராட்டி, அவரது வளர்ப்பை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். விக்னேஷ் சிவன் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது பலர் ரசிக்கச் செய்துள்ளது. 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad