• Breaking News

    பயிற்சியாளர் இல்லாமல் வேர்க்அவுட் வேண்டாம் - அருண் விஜய்


    நடிகர் அருண் விஜய்  உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். தற்போதைய லாக்டவுனில், அருண் விஜய் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்காக,  வீட்டில் பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.



    மற்றய பிரபலங்களைப் போலவே, அவர் ஒரு உடற்பயிற்சி செய்யும் படங்களையும் வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அதிகாலை, அவர் 25 விநாடி கால உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் போது உயரத்திலிருந்து கீழே விழுவது தெரிகிறது. இந்த விபத்தால் அவரது முழங்கால்கள் இரண்டும் வீங்கியுள்ளதாகவும், அதிஷ்டவசமாக தலையில் காயம் ஏற்படவில்லை என்றும் அருண் விஜய் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

    அருண்விஜய் இதனை தனது ட்விட்டரில் இவ்வாறு பதிந்துள்ளார்

     “#இதை ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம் !!! வேர்க்அவுட்டுக்கு முன் எப்போதும் உங்கள் இயந்திரங்களை சரிபார்க்கவும். அந்த விபத்தினால், ஒரு வாரம் என் முழங்கால்கள் வீங்கியிருந்தன. என் தலையில் காயம் ஏற்படவில்லை. கடவுளுக்கு நன்றி. (மேற்பார்வை அல்லது பயிற்சியாளர் இல்லாமல் ஒருபோதும் வேர்க்அவுட் செய்ய வேண்டாம்!). ”


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad