• Breaking News

    அமெரிக்க நிறுவனங்களை தாயகம் கொண்டுவரும் மசோதா மசோதா தாக்கல்


    அமெரிக்காவுக்கு சீனாவுக்க்கும் இடையிலானா அரசியல் முரண்பாடு இப்போ கொரோனா போராக உருவெடுத்துள்ளது. கொரோனாவால் வீழ்ச்சி அடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்த சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை அழைத்து வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காகஅமெரிக்க நிறுவனங்களை தாயகம் கொண்டுவரும் மசோதாஎன்ற மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் மார்க் கிரீன் என்ற செல்வாக்கு மிகுந்த எம்.பியான மார்க் கிரீன் தாக்கல் செய்தார்.

    மசோதாவைத்  தாக்கல் செய்த மார்க் கிரீன் கருத்துத் தெரிவிக்கையில்,


    அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். ஆனால், அமெரிக்க நிறுவனங்கள், சீனாவில் இருந்து இடம்பெயருவதற்கு செலவுதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சர்வதேச ரீதியாக, பொருளாதார நிச்சயமற்ற நிலைமையால், நாடு விட்டு நாடு செல்வது அதிக ஆபத்தும், அதிக செலவும் நிறைந்தது என்பதுதான் நிறைய நிறுவனங்களுக்கு தயக்கமாக இருக்கிறது.

    சீனா, நம்பகத்தன்மையற்ற கூட்டாளி என்று நிரூபித்து விட்டது. எனவே, அமெரிக்கா மீண்டும் வளர்வதற்கும், சீனாவை சார்ந்து இருப்பதை தவிர்ப்பதற்கும் வாய்ப்புகளுக்கு கதவை திறந்து வைப்பது நல்லது. சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் இடம்பெயர்வதற்கான செலவுகளுக்காக ஊக்கத்தொகை அளிப்போம். எனது மசோதா, வளர்ச்சிக்கு ஏற்றது என்றார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad