கம்பீரின் வீட்டில் கார் திருட்டு
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரருமான கவுதம் கம்பீரினுடைய தந்தையின் கார் வீட்டு வாசலிலிருந்து திருடப்பட்டுள்ளது.
பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்திய கிறிக்கெற் வீரருமான கவுதம் கம்பீரின் தந்தை தீபக் கம்பீர். இவர் கடந்த மே 28ம் திகதி தனது வெள்ளை நிற சொகுசு காரை டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர் பகுதியில் தனது வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். காலை எழுந்து பார்த்த பொழுது காரை காணவில்லை.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக கவுதம் கம்பீர் வீட்டுக்குபொ விரைந்தனர். அங்கு, அவரது வீட்டில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா சமயத்தில், கவுதம் கம்பீரின் தந்தை தீபக் அவர்களின் சொகுசு காரான "டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி" கார் திருடுபோன சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை