• Breaking News

    கட்டாரில் மாஸ்க் இன்றி நடமாடினால் அபராதம்



     மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு 2  இலட்சம் ரியால்கள்   வரை அபராதமாக விதிக்கப்படுமென கட்டார் அரசு அறிவித்துள்ளது.

    வளைகுடா நாடான கத்தாரில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,272 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வரும் ஞாயிறு முதல் வெளியே செல்வோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. உத்தரவை பின்பற்ற தவறுவோருக்கு 2 இலட்சம் ரியால்கள் வரை அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். தனியாக வாகனத்தை ஓட்டி வரும் நபருக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்   கட்டார் உள்துறை அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad