• Breaking News

    இஸ்ரேலுடன் சண்டையிடும் எந்த நாட்டுக்கும் ஆதரவளிக்க ஈரான் தயார்


    இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் எந்த நாடுடனும், குழுவுடனும் இணைந்து  ஈரான்  சண்டையிடும் என்று அந்நாட்டின் மூத்த தலைவர் அயத்துலா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து  ஈரான்   தலைவர்  அயதுல்லா அலி காமெனி  கூறும்போது, “ இஸ்ரேலுக்கு எதிராக இணைந்து போராடும் எந்தக் குழுவுடனும், எந்த நாட்டுடனும் இணைந்து சண்டையிட ஈரான் தயாராக உள்ளது. இதைக் கூறுவதற்கு எந்தத் தயக்கமும் ஈரானுக்கு இல்லைஇஸ்ரேல் அரசை அகற்றுவது என்பது  இஸ்ரேல் மக்களை அகற்றுவது அல்ல. எங்களுக்கு  இஸ்ரேல்  மக்களுடன் எந்தப் பிரச்சனையும் இல்லைஎன்றார்.
    மத்தியக் கிழக்குப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈரானும், இஸ்ரேலும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் சிரியா மீது   இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதலில் ஈடுபடுகின்றது. சிரியாவுக்கு ஆதரவாக ஈரான் ராணுவம் செயல்பட்டு வருகிறது.
    முன்னதாக, வெஸ்ட் பேங்க் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை இணைக்கும் இஸ்ரேலின் திட்டம் தொடர்பாக அவசரக் கூட்டம் ஒன்று பாலஸ்தீன ஜனாதிபதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அமெரிக்கா, இஸ்ரேலாகியவற்றுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வருவதாக பா லஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார் . இந்த நிலையில் ஈரான் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து அரபு நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad