அணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு
வடகொரியாவின்
அணு ஆயுத பலத்தை உயர்த்தும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க போவதாக அந்நாட்டு
அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி கிம் ஜோங் உன் நேற்று முக்கியமான ஆலோசனைகளை
மேற்கொண்டார். கடந்த மாதம் காணாமல் போய் திரும்பி வந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங்
தற்போது முதல் முறையாக அதிகாரபூர்வ கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். அந்நாட்டு ராணுவ
அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
வடகொரியா மத்திய ராணுவ கமிஷன் நடத்திய கூட்டத்தில்
கிம் கலந்து கொண்டார். வடகொரியாவின் பாதுகாப்பை உயர்த்துவது தொடர்பாக இவர்கள்
ஆலோசனைகளை மேற்கொண்டனர். வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை உயர்த்தும்
வகையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. வடகொரியா கடந்த எட்டு மாதங்களாக பெரிதாக அணு ஆயுத ஆராய்ச்சிகளை
மேற்கொள்ளவில்லை. கடந்த இரண்டு மாதம் முன் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. அதன்பின்
அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை எதையும் செய்யவில்லை. அதன்பின் தற்போதுதான் அங்கு
அணு ஆயுதம் குறித்த பேச்சு எழுந்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு படை மீண்டும் அணுகுண்டு
சோதனை நடத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி, ட்ரம்ப் ஆலோசனை மேற்கொண்டு
வருகிறார். முதற்கட்ட ஆலோசனை கடந்த மே 15 ஆம் திகதி நடந்துவிட்டது என்று கூறுகிறார்கள். வெள்ளை மாளிகையில் பென்டகன் அதிகாரிகள், சில
ராணுவ மேஜர்கள் முன்னிலையில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி
கொடுக்கவே வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறுகிறார்கள். அணு ஆயுத
சோதனையோடு பலமான ஆயுதங்களை உருவாக்கவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இதனால்
மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது அணு ஆயுத போராக இருக்குமோ என்று அச்சம்
எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை