ஷேன்வோனுக்கு ஸ்டீவோ பதிலடி
அவுஸ்திரேலிய
முன்னாள் கப்டன் ஸ்டீவோ தான் பேட்டிங் செய்த போது மொத்தம் 104 ரன் அவுட் சந்தர்ப்பங்களில் பங்காற்றியுள்ளார். இதில் 31 முறைதான் இவர் ரன் அவுட் ஆகியுள்ளார், மீதி 73 முறை எதிர்த்தாற்போல் இருக்கும் சகவீரர்தான் ரன் அவுட் ஆகியிருக்கிறார் இதனை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளம் வெளியிட்டது, இதற்கான வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் ராப் மூடி என்பவர் வெளியிட்டார்.
இதனையடுத்து ஷேன் வார்ன், ஸ்டீவோவை விமர்சித்தார், “என்னுடன் விளையாடிய வீரர்களில் ஸ்டீவோவை விடவும் சுயநலவாதியை நான் கண்டதில்லை. இந்த ரன் அவுட் புள்ளி விவரம் அதை உறுதி செய்கிறது” என்றார்.
ஸ்டீவோ க்கும் ஷேன்வோன் இப்போதல்ல எப்போதுமே கடுமையாகத் தாக்கி பேசிவருவது வழக்கம், அணியில் ஸ்லெட்ஜிங்கை அசிங்கமாக மாற்றியது ஸ்டீவோ என்பார். இருவருக்கும் ஒத்து வராது, ஏதோ முக்கியமான போட்டியில் தன்னை உட்கார வைத்தது தொடர்பாக இருவருக்கும் ‘வாய்க்காச் சண்டை’ ஆரம்பமானது.
இந்நிலையில் சுயநலவாதி கருத்துக்கு ஸ்டீவோ பதிலளிக்கையில்,
“மக்கள் இதனை வழிவழிப்பகையாகக் கருதுகிறார்கள். அப்படியல்ல இது இரு நபர்களுக்கு இடையிலான பகையே. எனவே நான் இதில் கொண்டுவரப்படவில்லை. எனவே இது ஒரு நபர் பற்றியதாகும். அவரது கருத்து அவரைத்தான் பிரதிபலிக்கிறது. எனக்கும் அவரது குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை, இவ்வளவுதான் என்னால் கூற முடியும்.” என்றார் ஸ்டீவோ
கருத்துகள் இல்லை