• Breaking News

    முகம் தெரியும் மாஸ்க்



    கொரோனா கைங்கரியத்தால் முகமூடி மனிதர்களாய் மாஸ்க் சகிதம் சுற்றித் திரிந்தாலும், ஒருவரை ஒருவர் இனம் கண்டுகொள்ளமுடியாதுள்ளதுஇனி சுலபமாக மக்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் புதுமையான 3டி மாஸ்க் தயாரித்துள்ளது கேரள ஸ்டுடியோ ஒன்று.

    நிஜ முகங்களே மறந்து போகும் அளவிற்கு இன்று முகமூடி மனிதர்களாய் மாறி விட்டோம்  கொரோனாவால் உலகமே இன்று மாஸ்க் சகிதமாய் தான் பொது இடங்களில் சுற்றி வருகிறது. நமக்கு நன்றாக தெரிந்த, நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் அருகில் நின்று கொண்டிருந்தால்கூட அவர்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு நிலை மாறி விட்டது.

    இந்தச் சூழ்நிலையில் தான், தேவை தான் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம் ஆகிறது என்ற தத்துவத்தின் அடிப்படையில் கேரளாவில் இந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கானப்பட்டுள்ளது.  அம்மாநில கோட்டயம் பகுதியில் உள்ள ஏட்டுமனூரை சேர்ந்த வினிஸ் என்பவர் தனது டிஜிட்டல் ஸ்டுடியோவில் நிஜ முகம் தெரியும் வகையில் புதுமையான முக கவசம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். 3டி பிரிண்ட் டி-ஷர்ட்களில் பிரிண்ட் செய்வது போலவே மாஸ்க்குகளிலும் நாம் கேட்டால், நமது முகத்தை 3டி முறையில் முக கவசத்தில் பிரிண்ட் செய்து தருகின்றார்.. வாடிக்கையாளர்களின் முகத்தின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை மட்டும் பிரிண்ட் செய்து தருவதால், சம்பந்தப்பட்டவர்கள் முக கவசம் அணியும்போது பாதி முகம் மறையும் பிரச்சனை இல்லை
    .
    இந்த மாஸ்க்கை மாட்டிக் கொள்வதால், மற்றவர்களுக்கும் நமது முகம் பளிச்சென தெரியும் என்பதால், மக்கள் விரும்பி இது போன்ற மாஸ்க்குகளை வாங்கிச் செல்கின்றனர். விரைவில் இந்த மாதிரியான மாஸ்க்குகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad