போதை பொருடன் இலங்கை வீரர் மதுஷங்க கைது
ஹெராயின் ப்[ஓதிப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கிறிக்கெற் அணியின் இளம் வீரரான ஷெஹன் மதுஷங்கவை இரண்டு வாரம்
சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.2018-ம் ஆண்டு சர்வதேச கிறிக்கெற்றில் அறிமுகமான இவர்
பங்காளஷுக்கு எதிரான இந்த முதல் போட்டியிலேயே ஹட்றிக் சாதனை படைத்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுஷங்க பயணம் செய்த காரை பொலிஸார் சோதனை
செய்தபோது இரண்டு கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கைப்பற்றினர்.
தீவிர விசாரணைக்குப்பின் வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டபோது ஷெஹன் மதுஷங்காவை இரண்டு வாரங்கள் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஷெஹன் மதுஷங்கா பங்களாதேஷுக்கு எதிராக 2018-ல் இரண்டு ரி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்னர் காயத்தால் விளையாடாமல் உள்ளார். ஷெஹன் மதுஷங்கா மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளதால் இலங்கை கிறிக்கெற் சபை அவரை நீக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கருத்துகள் இல்லை