ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி வைப்பு
சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான்,
தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. ரஷ்யாவில் உள்ள ஜெயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் வருகிற ஜூலை 22 மற்றும் 23 ஆம்திகதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது உலக அளவில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனோ தாக்குதல் காரணமாக இந்த மாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் உறுப்பு நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த மாநாட்டை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை